வன்னியில் வேதியல் ஆயுதப்பயன்பாடு -அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் இணையத்தளம் ,10, மார்ச்,2009 அன்று வன்னிப்போர்க்காலத்தில் மிகவும் கொடூரமான நாள் என்றும் அன்றுதான் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்தப்பகுதியில் இலங்கை அரசானது உச்சபட்ச வெடிக்கும் திறனுடைய எறிகணைகள்,காற்றிலே வெடிக்கக்கூடிய எறிகணைகள்,எரிகணைகள்(INCENDIARY WEAPONS,white phosphorus) போன்ற தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்களை உயிரோடு எரித்தது. என அன்றைய இலங்கைக்கான அமெரிக்கத்தூதர் ராபர்ட் ஒ பிளேக் அனுப்பிய தகவல்கள் அம்பலப்படுத்தியது.
The UN Resident Representative shared with Ambassador reports of increased shelling within the safe zone on March 10, causing 124 deaths and 254 injuries due to artillery fire. A reputable local contact working to provide medical care in the safe zone referred to March 10 as "the worst day ever," noting "air burst shells, incendiary shells (white phosphorous) in addition to high explosive shells" within the safe zone-wikileaks.ஐ.நா. தலைமை செயலரால் இலங்கையில் நடைப்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பன்னாட்டு மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புடைமை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூறும்பொருட்டு உருவாக்கப்பட்ட வல்லுனர்க்குழுவும் தனது அறிக்கையில் பத்தி 169யில் மேற்கண்ட போர்க்குற்றத்தை குறிப்பிடுகிறது.
இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ள ள்ளப்பட்ட ஐ.நா. உடன்படிக்கையின் படி எரிகணைகள் அப்பாவி மக்கள் மீதோ அல்லது பொதுமக்கள் செறிவாக இருக்கும் இடம் அருகிலிருக்கும் எதிரியின் நிலைமீதோ ஏறிகணைகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஐ.நா உடன்படிக்கைக்கு செல்ல
புதுக்குடியிருப்பில் 4,ஏப்ரல்,2009 அன்று நடந்த இந்தவகை தடை செய்யப்பட வேதியல் ஆயுதங்களை பயன்படுத்தி சிங்கள காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான பேடித்தாக்குதல்களாலேயே புலிகளின் தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.http://www.defence.lk/new.asp?fname=20090405_04

